| ADDED : ஜூன் 12, 2024 12:23 AM
சிவகங்கை : சிவகங்கை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் இந்திய மருத்துவ கழகம் பரிந்துரை செய்த டாக்டர்கள், மருத்துவ சான்று வழங்க மென் பொருளில் பதிவு செய்யும் நிகழ்ச்சி நடந்தது.மத்திய மோட்டார் வாகன விதிப்படி 40 வயதிற்கு மேற்பட்டோர் பதிவு பெற்ற டாக்டரிடம் மருத்துவ சான்று பெற்ற பின்பு தான் புதிய லைசென்ஸ் பெறவோ, புதுப்பிக்கவோ முடியும் என போக்குவரத்து துறை அறிவுறுத்தியுள்ளது.நேற்று சிவகங்கை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் இந்திய மருத்துவ கழகம் அங்கீகாரம் அளித்த டாக்டர்களின், பெயர் பதிவு செய்யும் பணி நடந்தது.இதில், வட்டார போக்குவரத்து அலுவலர் மூக்கன் தலைமை வகித்தார். போக்குவரத்து ஆய்வாளர் மாணிக்கம் முன்னிலை வகித்தார். தேசிய தகவல் மைய அலுவலர்கள் சாதிக், ராஜகுரு ஆன்லைனில், டாக்டர்களின் பெயர்களை பதிவு செய்தனர்.வட்டார போக்குவரத்து அலுவலர் மூக்கன் கூறியதாவது: போக்குவரத்து ஆணையர், கலெக்டர் பரிந்துரைப்படி ஆன்லைனில் டாக்டர்களின் பெயர்களை (சாரதி) மென்பொருளில் பதிவு செய்துள்ளோம்.இனி மாவட்ட அளவில் 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் புதிய லைசென்ஸ் பெறவோ, புதுப்பிக்கவோ ஆன்லைன் மூலம் இந்த டாக்டர்களிடம் மருத்துவ சான்றுக்கு விண்ணப்பிக்கலாம். அவர்கள் மருத்துவ சான்றுக்கு ஒப்புதல் அளித்ததும், வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லைசென்ஸ் வழங்கப்படும்.