உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பாதாள சாக்கடை இணைப்பு நோட்டீஸ் வந்தால் முறையிடலாம் நகராட்சி கமிஷனர் தகவல்

பாதாள சாக்கடை இணைப்பு நோட்டீஸ் வந்தால் முறையிடலாம் நகராட்சி கமிஷனர் தகவல்

சிவகங்கை : சிவகங்கை நகராட்சியில் பாதாள சாக்கடை இணைப்பு வழங்கப்படாமல் வரி கட்ட நோட்டீஸ் வந்திருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் நகராட்சி அலுவலகத்தில் முறையிடலாம் என நகராட்சி கமிஷனர் கிருஷ்ணராம் தெரிவித்தார்.அவர் கூறுகையில், சிவகங்கை நகராட்சி எல்லைக்குட்பட்ட 27 வார்டுகளில் தாங்கள் செலுத்த வேண்டிய சொத்து வரி, தொழில் வரி, குடிநீர் கட்டணம், பாதாள சாக்கடை கட்டணம் செலுத்துமாறு கேட்டு அறிவிப்பு வழங்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரிகளை நிலுவையின்றி செலுத்தி ஒத்துழைப்பு வழங்க வேண்டும். மேலும் தங்களது வீடுகளில் பாதாள சாக்கடை இணைப்பு வழங்கப்படாமல் வரிகட்ட நோட்டீஸ் வந்தால் அவர்கள் நகராட்சி அலுவலகத்தில் முறையிட்டு விண்ணப்பம் வழங்கலாம். தங்களது விண்ணப்பங்களை பரிசீலித்து தங்களது கோரிக்கை நிவர்த்தி செய்யப்படும் என்றார்.மேலும் அவர் கூறியதாவது: சிவகங்கை நகராட்சிக்கு சொத்துவரி, கடை வாடகை, தண்ணீர் வரி உள்ளிட்டவை மூலம் ஆண்டுக்கு 8 கோடியே 54 லட்சம் வருவாய் வருகிறது. தற்போது வரை 6 கோடியே 41 லட்சம் வசூலாகி உள்ளது.தொழில் வரி 70 லட்சத்து 54 ஆயிரமும், சொத்து வரி 4 கோடியே 72 லட்சமும், தண்ணீர் வரி 85.34 லட்சமும், கடை வாடகை 83.49 லட்சமும் வசூல் செய்ய வேண்டி உள்ளது. இதில் தொழில் வரி 62.15 லட்சமும், சொத்துவரி 3 கோடியே 90 லட்சமும், தண்ணீர் வரி 48.84 லட்சமும், கட வாடகை 81.30 லட்சமும் வசூல் செய்யப்பட்டுள்ளது. வரி செலுத்தாதவர்கள் விரைந்து வரி செலுத்த வேண்டும். இரண்டாம் தவணை வரியை முன்கூட்டியே செலுத்தினால் 5 சதவீத ஊக்கத்தொகை வழங்கப்படும். கடந்த ஆண்டு போல் இந்த ஆண்டும் சிவகங்கை நகராட்சியில் அனைவரும் முழுமையாக வரி செலுத்தினால் நகராட்சியின் வளர்ச்சி பணியை சிறப்பாக செயல்படுத்த முடியும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை