| ADDED : ஜூன் 16, 2024 10:31 PM
திருப்புத்தூர்: திருப்புத்தூர் அருகே தென்கரை மவுண்ட் சீயோன் சில்வர் ஜூபிலி சி.பி.எஸ்.இ., பள்ளி தேசிய அடல் டிங்கரிங் மாரத்தான் போட்டிகளில் தர வரிசையில் வெற்றி பெற்றது. தேசிய அளவில் பள்ளிகளில் அடல் டிங்கரிங் ஆய்வகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.இதன் மூலம் அறிவியல் சூழலை மாணவர்களிடையே வளர்ப்பதுடன், புதியவற்றை உருவாக்கி மாணவர்களை தொழில் முனைவோராக்க ஊக்குவிக்கிறது.கடந்த 2022- 23 ம் ஆண்டில் தேசிய அளவில் பொருளாதாரம், உள்கட்டமைப்பு, அமைப்புகள், மக்கள்தொகை மற்றும் தேவை ஆகிய ஐந்து கருப்பொருளை கொண்டு போட்டி நடந்தது.இதில், இப்பள்ளி பிளஸ் 2 மாணவிகள் ஹெவனா பவுலின் ஸ்ரேயா, பகீமா சம்ரின் பங்கேற்று குழந்தைகளின் ஊட்டச்சத்து நிலை, உடல் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு பின்தொடர்தல் குறித்து சமர்ப்பித்தனர். இப்போட்டிகளில் தேசிய அளவில் இன்ஸ்பயர் விருது, மாநில ரோபோட்டிக் லீக் போட்டியில் 2ம் இடம் பெற்று வெற்றி பெற்றனர்.இம்மாணவர்களை கல்வி குழும தலைவர் பிளாரன்ஸ் ஜெயபாரதன், பள்ளி தாளாளர்கள் ஜெய்சன் கீர்த்தி, விவியன் ரேச்சல் ஜெய்சன் பாராட்டினர்.