உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி

ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி

சிவகங்கை : சிவகங்கை வட்டார தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் முதல் பருவ பயிற்சி சிவகங்கை மருதுபாண்டியர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்தது.ஆசிரியர்கள் 146 பேர் கலந்து கொண்டனர். கருத்தாளர்களாக மாவட்ட அளவில் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் பயிற்சியளித்தனர்.ஏற்பாடுகளை மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் சோபியா, சிவகங்கை வட்டார வளமைய மேற்பார்வையாளர் ரூபா ராணி, புலவர் காளிராசா, ஆசிரியர் பயிற்றுநர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !