உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கட்டிக்குளத்தில் பங்குனி தேரோட்டம்

கட்டிக்குளத்தில் பங்குனி தேரோட்டம்

மானாமதுரை: மானாமதுரை அருகே உள்ள கட்டிக்குளம் சூட்டுக்கோல் ராமலிங்க சுவாமி கோயிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 10 நாட்களுக்கு முன்பு கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவில் உற்சவர் சுவாமிகள் பல்வேறு மண்டகப் படிகளுக்கு எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டத்திற்காக சுவாமிகள் சர்வ அலங்காரங்களுடன் கோயில் முன்பாக அலங்கரிக்கப்பட்ட தேருக்கு எழுந்த பின்னர் கட்டிக்குளம் மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் தேரை இழுத்து வந்தனர். தேர் நிலையை அடைந்தவுடன் சுவாமிக்கு தீபாராதனை காட்டப்பட்டது. அன்னதானமும் நடந்தது. விழாவில் சுற்று வட்டார கிராம பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் மற்றும் கட்டிக்குளம் கிராமத்தினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை