உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / காரைக்குடி பழைய மருத்துவமனையில் டாக்டர்கள் இல்லாததால் நோயாளிகள் அவதி

காரைக்குடி பழைய மருத்துவமனையில் டாக்டர்கள் இல்லாததால் நோயாளிகள் அவதி

காரைக்குடி : காரைக்குடி பழைய அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சைக்கு டாக்டர்கள் இல்லாததால் நோயாளிகள் சிரமப்படுகின்றனர்.காரைக்குடி ரயில்வே பீடர் ரோட்டில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை செயல்பட்டு வந்தது. இங்கு உள் நோயாளிகள் பிரிவு வெளி நோயாளிகள் பிரிவு பிரசவ வார்டு அவசர சிகிச்சை ரத்த வங்கி என பல்வேறு பிரிவுகள் செயல்பட்டு வந்தன. காளவாய் பொட்டல், ரயில்வே ரோடு, அரியக்குடி, கணேசபுரம், இடையர் தெரு உட்பட காரைக்குடியின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்கள் சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில், காரைக்குடி அருகேயுள்ள சூரக்குடி சாலையில் புதிய அரசு மருத்துவமனை கட்டடம் கட்டப்பட்டது. பிரசவ வார்டு மற்றும் புறநோயோளி பிரிவுகளுடன் மருத்துவமனை செயல்பட தொடங்கியது.தற்போது, மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலப்பிரிவு, அவசர சிகிச்சை, ரத்த வங்கி, சிடி ஸ்கேன், முதலமைச்சர் காப்பீட்டு திட்டம், டயாலிசிஸ், காது மூக்கு தொண்டை பிரிவு, வெளி நோயாளிகள் பிரிவு உள்ளிட்ட பிரிவுகள் செயல்பட்டு வருகிறது.வெவ்வேறு இடங்களில் செயல்பட்ட மருத்துவமனைகள் புதிய கட்டடத்தில் ஒரே இடத்தில் செயல்பட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள், எதிர்ப்பு தெரிவித்ததால் பழைய அரசு மருத்துவமனை வழக்கம்போல் செயல்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் தற்போது, காலையில் மட்டும் டாக்டர்கள் இருப்பதாகவும் மதியம் மற்றும் மாலை வேளைகளில் டாக்டர்கள் இல்லாததால் அவசர சிகிச்சைக்கு செல்லும் நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் சிரமப்படும் சூழ்நிலை நிலவுகிறது.புதிய அரசு மருத்துவமனை கட்டடத்திற்கு செல்வதற்கு உரிய பஸ் வசதி இல்லை. மருத்துவமனையில் அவசர சிகிச்சை அளிப்பதற்கு உரிய டாக்டர்களை நியமித்து சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி