உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பள்ளம் தோண்டி பல மாதங்களாச்சு பணி நடக்காததால் மக்கள் தவிப்பு

பள்ளம் தோண்டி பல மாதங்களாச்சு பணி நடக்காததால் மக்கள் தவிப்பு

காரைக்குடி : காரைக்குடி ரயில்வே ஸ்டேஷனில் காம்பவுண்ட் சுவர் கட்டும் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.காரைக்குடி ரயில்வே ஸ்டேஷனில் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் ரூ.13.91 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சிப் பணிகள் நடைபெறுகிறது. முதற்கட்டமாக ரூ.4.95 கோடி மதிப்பீட்டில் காம்பவுண்ட் சுவர், லிப்ட், ஆர்ச், நவீன ரை, பைக் ஸ்டாண்ட், பயணிகள் காத்திருப்பு அறை உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடந்து வருகிறது. பணிகள் தொடங்கி பல மாதங்களாகியும் பணிகள் மந்தமாக நடந்து வருவதாக புகார் எழுந்துள்ளது. ரயில்வே ஸ்டேஷன் முன் காம்பவுண்ட் சுவர் கட்டும் பணிக்காக பள்ளங்கள் தோண்டப்பட்டு பல மாதங்கள் ஆகிறது. இதுவரை பணி நடைபெறவில்லை. இதேபோல பாதாள சாக்கடை திட்டத்திற்காக பள்ளங்கள் தோண்டப்பட்டு புதிய சாலை அமைக்கும் பணியும் நடைபெறவில்லை.இதனால் ரயில்வே ஸ்டேஷன் சாலை மண்சாலையாக காட்சியளிப்பதோடு பள்ளங்களால் வாகனங்கள் சிக்கிக் கொள்கிறது. தோண்டப்பட்டுள்ள பள்ளத்தால் இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ