உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கிராமங்களில் நிற்க மறுக்கும் பஸ்களால் மக்கள் அவதி

கிராமங்களில் நிற்க மறுக்கும் பஸ்களால் மக்கள் அவதி

காரைக்குடி: காரைக்குடியில் இருந்து கல்லல் செல்லும் டவுன் பஸ்கள் பல கிராமங்களில் நின்று செல்லாததால் கிராம மக்கள் சிரமப்படுகின்றனர்.காரைக்குடியிலிருந்து கல்லல், புதுவயல், தேவகோட்டை உட்பட பல்வேறு பகுதிகளுக்கு 30க்கும் மேற்பட்ட டவுன் பஸ்கள் இயக்கப்படுகிறது.காரைக்குடியிலிருந்து மானகிரி, தளக்காவூர், செவரக்கோட்டை, தேவரப்பட்டு வழியாக கல்லல் செல்லும் டவுன் பஸ்கள் வழியில் கிராமப் பகுதியில் நிற்பதில்லை என தொடர்ந்து மக்கள் புகார் கூறுகின்றனர். பலமுறை அதிகாரிகளிடம் மக்கள் கூறியும் நடவடிக்கை இல்லை. போக்குவரத்து அதிகாரிகள் தெரிவிக்கையில், விவசாயிகள் மாணவர்கள் கிராம மக்கள் பயன்பாட்டிற்கு அனைத்து பகுதிகளிலும் நின்று செல்வதற்கு தான் டவுன் பஸ்கள் விடப்பட்டுள்ளது.பஸ் ஸ்டாப்களில் நிற்காத டவுன் பஸ்சை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை