மேலும் செய்திகள்
பெட்ரோல் குடித்து ஒருவர் பலி
5 hour(s) ago
பயிற்சி முகாம்
5 hour(s) ago
சாய்பாபா கோயிலில் சிறப்பு பூஜை
5 hour(s) ago
தேவகோட்டையில் அம்பு எய்தல் வைபவம்
5 hour(s) ago
சிலை பிரதிஷ்டை
5 hour(s) ago
சிவகங்கை: உரிமைத்தொகை, வேலை வாய்ப்பு, பட்டா வழங்க கோருதல் உட்பட பல்வேறு கோரிக்கைகளுக்காக நேற்று சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்ததால், அதிகாரிகள் திகைத்தனர். சிவகங்கை கலெக்டர்அலுவலகத்தில் திங்கள் தோறும் குறைதீர் கூட்டம் நடைபெறும். கலெக்டர் ஆஷா அஜித் தலைமையில் அதிகாரிகள் மனுக்களை பெற்று, அந்தந்த துறைகளின் நடவடிக்கைக்கு பரிந்துரை செய்வார்கள். ஒவ்வொரு வாரமும் 400 முதல் 500 மனுக்கள் மட்டுமே வரும். இந்நிலையில் தேர்தல் நடத்தை விதி முடிவுக்கு பின் நேற்று பொது குறைதீர் கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது. இதில், மகளிர் உரிமைத்தொகை கிடைக்காத பெண்கள் சிலர் வசதி படைத்த பெண்களுக்கு மகளிர் உரிமை தொகை வழங்குகிறீர்கள். கஷ்டப்படும் எங்களுக்கு வழங்க கூடாதா எனக்கேட்டு கலெக்டரிடம்நேற்று மனு அளிக்க குவிந்தனர்.இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்களை பணியில் இருந்து விடுவித்ததால், தங்களை தொடர்ந்து தன்னார்வலர்களாக பணி செய்ய அனுமதிக்க கோரி நுாற்றுக்கணக்கான பெண்கள் நேற்று கலெக்டரிடம் மனு அளித்தனர். பெண்கள் வேலைவாய்ப்பு கோரியும், இலவச வீட்டு மனை பட்டா கோருதல் உட்பட ஏராளமான கோரிக்கைகளுக்காக வழக்கத்தை விட நேற்று அதிக அளவில் மக்கள் குறைதீர் கூட்ட அரங்கில் குவிந்தனர். திகைத்துபோன அதிகாரிகள்
அதிகாரிகள் என்ன செய்வதென தெரியாமல் திக்கு முக்காடினர். குறிப்பாக மனுக்களை பதிவு செய்யும் இடத்தில் நிற்க கூட இடமின்றி மின்விசிறி வசதி இல்லாத அறையில் கூட்டமாக காத்திருந்தனர். சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர் கூட்டத்தில் குறிப்பாக மகளிர் உரிமை தொகை கேட்டு மனுக்களுடன் வந்த பெண்களால் அதிகாரிகள் திகைத்து விட்டனர்.
5 hour(s) ago
5 hour(s) ago
5 hour(s) ago
5 hour(s) ago
5 hour(s) ago