உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / தீர்த்த கலயங்களை சுமந்து ராமேஸ்வரத்திற்கு பாதயாத்திரை

தீர்த்த கலயங்களை சுமந்து ராமேஸ்வரத்திற்கு பாதயாத்திரை

மானாமதுரை : மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டாவிலிருந்து வந்த பக்தர்கள் ராமேஸ்வரத்திற்கு தீர்த்த கலயங்களை பாதயாத்திரையாக மானாமதுரை வழியாக சுமந்து சென்றனர்.மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டாவிலிருந்து குருஜி பிண்டு மண்டூல் தலைமையிலான 32 பேர் கடந்த 15 ம் தேதி ரயிலில் புறப்பட்டு விஜயவாடா வந்து அங்கிருந்து மதுரை வந்தடைந்தனர். நேற்று மதுரை மீனாட்சி அம்மனை தரிசனம் செய்த பிறகு பாதயாத்திரையாக மதுரை வைகை ஆற்றில் தீர்த்தங்களை எடுத்து தோளில் சுமந்து கொண்டு மானாமதுரை வழியாக ராமேஸ்வரத்திற்கு சென்றனர்.பிண்டு மண்டூல் கூறியதாவது: தமிழகத்தின் கோயில் நகரமாக விளங்கக்கூடிய மதுரை மீனாட்சி அம்மனை தரிசனம் செய்த பிறகு புண்ணிய தீர்த்தமான வைகை ஆற்றில் தீர்த்தத்தை எடுத்து தோளில் சுமந்து பாதயாத்திரையாக மானாமதுரை வழியாக ராமேஸ்வரம் சென்று ராமநாத சுவாமியை வழிபட்ட அங்கிருந்து தனுஷ்கோடி, கன்னியாகுமரி சென்று கடலில் தீர்த்தம் எடுத்துக்கொண்டு ஆந்திராவில் உள்ள மல்லிகார்ஜூன கோயிலுக்கு சென்று வழிபட்ட பின்னர் மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள மகா காலேஸ்வர கோயிலுக்கு செல்ல இருப்பதாகவும், முக்கிய நதிகள் மற்றும் கடலில் எடுக்கப்படும் தீர்த்தங்களை கொண்டு சுவாமியை தரிசனம் செய்த பிறகு அந்த தீர்த்தங்களோடு சொந்த ஊர் திரும்ப உள்ளதாக தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை