உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சிவகங்கையில் மூடுவிழா கண்ட  பி.எஸ்.என்.எல்., சேவை மையம்:  வாடிக்கையாளர்கள் தவிப்பு  

சிவகங்கையில் மூடுவிழா கண்ட  பி.எஸ்.என்.எல்., சேவை மையம்:  வாடிக்கையாளர்கள் தவிப்பு  

சிவகங்கை : சிவகங்கையில் பல ஆண்டாக இயங்கி வந்த பி.எஸ்.என்.எல்., அலைபேசி சேவை மையம் மூடு விழா கண்டதால், பயனாளர்கள் தவித்து வருகின்றனர்.சிவகங்கை கலெக்டர் அலுவலக வளாகத்தில் பி.எஸ்.என்.எல்., தொலைபேசி மற்றும் அலைபேசி சேவை மையம் செயல்பட்டு வந்தது. தொலைபேசி இணைப்பு, பிராட்பேண்ட் இணைப்பு சார்ந்த சேவைகளுக்கு தொடர்பு கொள்ள உதவி கோட்ட பொறியாளர் தலைமையில் அதிகாரிகள் இயங்கி வந்தனர்.பி.எஸ்.என்.எல்., அலைபேசி சேவை மையம் மூலம், 1,500க்கும் மேற்பட்ட போலீசார் குடும்பம் அலைபேசி குரூப் சிம் பெற்றுள்ளனர். இது தவிர பொதுமக்கள், அரசு அதிகாரிகள், வர்த்தகர்கள் என அனைத்து தரப்பினரும் பி.எஸ்.என்.எல்., அலைபேசி சிம் பயன்படுத்தி வருகின்றனர்.இவர்கள் சிம் கார்டுகளை மாற்றுவதற்கு, பில் கட்டணம் செலுத்தவும், குறைபாடுள்ள சிம்களை மாற்றிக்கொள்ள சிவகங்கையில் உள்ள சேவை மையத்தை பயன்படுத்தி வந்தனர். அதே போன்று தொலைபேசி, பிராட்பேண்ட் சேவை குறைபாட்டை தெரிவிக்க உதவி கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் இருந்த அதிகாரிகளை தொடர்பு கொண்டு வந்தனர். இங்கிருந்த உதவி கோட்ட பொறியாளர் ஓய்வுக்குபின் புதிய அதிகாரிகள் நியமிக்கவில்லை. இளநிலை டெலிபோன் ஆப்பரேட்டர், உதவி பொறியாளர் என இருந்த பணியிடங்களில் இருந்த அலுவலர்களை மாற்றி, இன்றைக்கு சிவகங்கை பி.எஸ்.என்.எல்., அலுவலகத்தை பாழடைந்த கட்டடம் போல் மாற்றி விட்டனர்.கூடுதல் சிம் கார்டு பெறவோ, சேவை குறைபாடு குறித்து புகார் தெரிவிக்க முடியாத வகையில், பி.எஸ்.என்.எல்., அலுவலகத்திற்கு அதிகாரிகள் மூடுவிழா கண்டு விட்டனர்.பி.எஸ்.என்.எல்., நிர்வாகம் சிவகங்கையில் தொடர்ந்து சேவைமையத்தை நல்ல முறையில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை