உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கொன்னத்தான்பட்டியில் புரவி எடுப்பு விழா

கொன்னத்தான்பட்டியில் புரவி எடுப்பு விழா

திருப்புத்துார் : திருப்புத்துார் ஒன்றியம் கொன்னத்தான்பட்டியில் நான்கு ஆண்டுகளுக்கு பின்னர் நடந்த கற்புடைய நாயகி அம்மன், கருமலை சாத்த அய்யனார் கோயில் புரவி எடுப்பு விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.கொன்னத்தான்பட்டியில் வைகாசி வளர்பிறையில் புரவி எடுப்பு விழா நடைபெறுவது வழக்கம். நிர்வாக காரணங்களால் இந்த முறை ஆனியில் கொண்டாடப்பட்டது. சித்திரை பிடி மண் கொடுத்தும், ஆனி 16ல் காப்புக்கட்டப்பட்டது.நேற்று முன்தினம் சூளையிலிருந்து புரவிகள் கிராமத்தினரால் எடுத்து வரப்பட்டு புரவி பொட்டலில் சேர்த்து புரவிகளுக்கு சிறப்பு வழிபாடு, தீபாராதனை நடந்தது. பின்னர் மறுநாள் இரவில் புரவிகளை ஊர்வலமாக கிராமத்தினர் கோயிலுக்கு எடுத்துச் சென்றனர்.பெரிய கருப்பர் சின்ன கருப்பர் இரண்டு அரண்மனை புரவிகள் மற்றும் அய்யனாருக்கு கொண்டு செல்லும் யானை புரவிகளுக்கு மலர்கள், பட்டு வஸ்திரங்களால் அலங்காரம் செய்யப்பட்டு ஊர்வலத்தில் வந்தன.கோயிலில் புரவிகள் சேர்ந்த பின்னர் சுவாமிகளுக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. நான்கு ஆண்டுகளுக்கு பின்னர் விழா நடந்ததால் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை