உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / புதர் மண்டி பராமரிப்பில்லாத குன்றக்குடி போலீஸ் குடியிருப்பு

புதர் மண்டி பராமரிப்பில்லாத குன்றக்குடி போலீஸ் குடியிருப்பு

காரைக்குடி: குன்றக்குடி போலீஸ் குடியிருப்பு வளாகம் பராமரிப்பின்றி புதர் மண்டி கிடப்பதால் விஷ ஜந்துக்களால் வசிப்போர் பாதிக்கப்பட்டுள்ளனர்.குன்றக்குடியில் 1999ம் ஆண்டுதமிழ்நாடு காவலர் வீட்டு வசதி கழகம் சார்பில், போலீஸ் குடியிருப்பு கட்டப்பட்டது. இதில் 10 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இங்குள்ள பழைய கட்டடங்கள் பல அகற்றப்படாமல் பராமரிப்பின்றி கிடக்கிறது. இந்த கட்டடத்திலும், குடியிருப்புகளை சுற்றிலும் கருவேல மரங்கள் மற்றும் செடிகள் வளர்ந்து புதர் மண்டி கிடக்கிறது.இதனால் விஷ ஜந்துக்கள் மற்றும் பூச்சிகளால் குடியிருப்போர் அவதியடைந்து வருகின்றனர். தவிர இரவு நேரங்களில் சிறுவர் சிறுமியர் வெளியில் வருவதற்கே அச்சமடைகின்றனர்.தவிர தண்ணீர் குழாய் பல பராமரிப்பின்றி தண்ணீர் வீணாகி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ