உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / தம்மம் ஊருணி புனரமைக்க கோரிக்கை

தம்மம் ஊருணி புனரமைக்க கோரிக்கை

திருப்புத்துார்: - திருப்புத்துார் தென்மாப்பட்டில் குடிநீருக்கு மக்கள் பயன்படுத்திய தம்மம் ஊரணியை புனரமைக்க பொதுமக்கள் கோரியுள்ளனர்.திருப்புத்துார் நகரின் முக்கிய குடிநீர் ஊரணிகளில் ஒன்றாக இருந்தது தென்மாப்பட்டு தம்மம் ஊரணி. இந்த குடிநீர் சமைக்க பயன்படுவதால் பெண்கள் இங்குள்ள நீரை எடுத்து பயன்படுத்தினர். ஊரணியில் எப்போதும் மழைநீர் சேகரிக்கப்பட்டு,அப்பகுதி நிலத்தடிநீரும் நன்றாக இருந்தது. தற்போது வரத்துக்கால்வாய் ஆக்கிரமிப்புக்குள்ளாகி துார்ந்து விட்டன. சில ஆண்டுகளாக மழைநீர் வர வாய்ப்பில்லாமல் போய் விட்டது.இதனால் ஊரணியும் தூர்ந்து உள்ளே நாணல், முட்செடிகள் வளர்ந்து ஊரணியை முற்றிலுமாக மூடி விட்டது. கரைகளும், படித்துறையும் விரிசலடைந்து காணப்படுகிறது. இப்பகுதியினர் ஊரணியை முற்றிலுமாக புனரமைத்து நிரந்தரமாக வரத்துக் கால்வாய் சீரமைக்க கோரினர்.பேரூராட்சியினர் கூறுகையில், தற்போது சரிந்த ஒரு புறக்கரை ரூ 9 லட்சம் மதிப்பில் கான்கிரீட் தடுப்புச்சுவர் கட்டப்பட்டுள்ளது. முற்றிலுமாக கரை பலப்படுத்தப்பட்டு, துார் வாரி ஊரணி புனரமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அரசு நிதி அனுமதிக்கு அனுப்பப்பட்டுள்ளது. ' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்