உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / காரைக்குடியில் சப்- கோர்ட் அமைக்க கோரிக்கை

காரைக்குடியில் சப்- கோர்ட் அமைக்க கோரிக்கை

காரைக்குடி : காரைக்குடியில் தொழில் வணிகக் கழகம் சார்பில் அனைத்து கட்சிகள் மற்றும் பொதுநல அமைப்புகளின் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மூத்த வழக்கறிஞர் சங்கர் தலைமையேற்றார். தொழில் வணிகக் கழகத் தலைவர் சாமி திராவிடமணி முன்னிலை வகித்தார். செயலாளர் கண்ணப்பன் வரவேற்றார். இதில், பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், சட்டத்துறை விதிகளின்படி தாலுகாவிற்கு சப்- கோர்ட்டையும் மக்கள் தொகை அதிகரிப்புக்கு ஏற்ப கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தையும் காரைக்குடியில் அமைக்க வேண்டும்.போக்குவரத்து அமைச்சரின் வாக்குறுதியின் படி, புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டடத்தில், மாவட்ட போக்குவரத்து அலுவலரை நியமனம் செய்வதோடு, வட்டார போக்குவரத்து அலுவலகமாக செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பொருளாளர் சரவணன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை