உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / தரிசு நிலத்தை விளை நிலமாக்க ரூ.7500 மானியம்: அதிகாரி தகவல்

தரிசு நிலத்தை விளை நிலமாக்க ரூ.7500 மானியம்: அதிகாரி தகவல்

மானாமதுரை: மானாமதுரை வட்டாரத்தில் தரிசு நிலங்களை விவசாய நிலமாக மாற்ற ரூ.7500 மானியமாக வழங்கப்படுவதாக தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.மானாமதுரை வட்டாரத்தில் தரிசு நிலங்களை விவசாய நிலமாக மாற்றும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் வயல்களில் கருவேல மரங்களை அகற்றி மிளகாய் சாகுபடி செய்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பெருக்கும் நோக்கமாக சந்தைப்படுத்தும் வரை மானியம் வழங்கப்படுகிறது.கருவேல மரங்களை அகற்ற ரூ.7500 பின்னேற்பு மானியமும், அந்த நிலங்களில் மிளகாய் சாகுபடி செய்ய ரூ.12000 மதிப்புள்ள மிளகாய் நாற்றுக்கள் மற்றும் இடு பொருட்கள் முழு மானியத்திலும் வழங்கப்படுகின்றன. சாகுபடியை ஊக்குவிக்கும் வகையிலும், மகசூலை அதிகப்படுத்தவும் பண்ணை குட்டை அமைக்கவும், சொட்டுநீர் பாசன கருவிகள் மற்றும் பைப்புகளுடன் கூடிய தெளிப்பான்கள் வழங்கவும் மானியம் உள்ளது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் தங்களது நில பட்டா,அடங்கல், ஆதார் நகல்,ரேஷன் கார்டு நகல்,வங்கி கணக்கு புத்தக நகல், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ ஆகியவற்றுடன் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் எனவும், விவரங்களுக்கு 88707 54712 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி