உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / ஆடித்திருவிழாவில் அரிவாள் மீது நின்ற சாமியாடி

ஆடித்திருவிழாவில் அரிவாள் மீது நின்ற சாமியாடி

திருப்புத்துார், : திருப்புத்துார் அருகே அம்மன் கோயில் திருவிழாவில் சாமியாடி அரிவாள் மீது ஏறி நின்று அருள்வாக்கு கூறினார்.புதுப்பட்டி மாவூடியூத்து காளியம்மன் கோயிலில் ஆடித்திருவிழா நடந்தது. விழாவையொட்டி ஆண்டி முனீஸ்வரர் கோயில் வீட்டில் நடந்த சாமியாட்டத்தை தொடர்ந்து, கரந்தமலையில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர் குடம், பால்குடம், பூத்தட்டு, தீச்சட்டிகளை பக்தர்கள் ஊர்வலமாக சுமந்து வந்தனர். வழியில் சாமியாடி அரிவாள் மீது ஏறி நின்று பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறினார். இவ்வாக்கை கேட்பதற்காக புதுப்பட்டி, புதுார், நெடுமரம், உடையநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்திருந்தனர். தொடர்ந்து அம்மனுக்கு பாலாபிஷேகம், பூச்சொரிதல் நடந்தது. தொடர்ந்து ஆடு பலியிடப்பட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை