மணல் கடத்தல் 4 பேர் கைது
மானாமதுரை : மானாமதுரை அருகே கல்குறிச்சி வைகை ஆற்று பகுதியில் எஸ்.ஐ.,பூபதி ராஜா,சிப்காட் எஸ்.ஐ., சந்தன கருப்பு மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். சரக்கு வாகனத்தில் மணல் கடத்திய கல்குறிச்சி ஆலங்குளம் கிராமத்தைச் சேர்ந்த தங்கையா மகன் கண்ணன் 31, சாத்தையா மகன் கனக சபாபதி மற்றும் டூவீலரில் மணல் கடத்திய கல்குறிச்சியைச் சேர்ந்த மாரி மகன் மாயழகு 45,சின்னத்தம்பி மகன் ராமையா 47,ஆகிய 4 பேரை கைது செய்து மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட சரக்கு வாகனம் மற்றும் டூவீலரை பறிமுதல் செய்தனர்.