உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மாணவருக்கு அரிவாள் வெட்டு

மாணவருக்கு அரிவாள் வெட்டு

திருப்புவனம்: திருப்புவனம் இந்திரா நகரில் நேற்று மதியம் சட்டக் கல்லூரி மாணவர் அரிவாளால் வெட்டப்பட்டார். இந்திரா நகர் அம்மாசி மகன் அழகர்சாமி 24, சட்ட கல்லுாரி மாணவரான இவருக்கும் உறவினரான பக்கத்து வீட்டைச் சேர்ந்த செல்வகுமார் குடும்பத்தினருக்கும் முன் விரோதம் இருந்துள்ளது. ஆத்திரத்தில் இருந்த செல்வகுமாரின் 17 வயது மகன் நேற்று மதியம் வீட்டு வாசலில் அழகர்சாமியை அரிவாளால் வெட்டியதில் படுகாயமடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.திருப்புவனம் போலீசார் சிறுவனிடம் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ