உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கட்சியில் உழைப்பவர்களுக்கு முன்னுரிமை சொல்கிறார் செல்வபெருந்தகை

கட்சியில் உழைப்பவர்களுக்கு முன்னுரிமை சொல்கிறார் செல்வபெருந்தகை

சிவகங்கை: ''கட்சியில் உழைப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்,'' என, சிவகங்கையில் காங்., மாநில தலைவர் செல்வபெருந்தகை தெரிவித்தார்.அவர் கூறியதாவது: கட்சி தலைவர்களுக்கு பாதுகாப்பு இல்லை என ஜான்பாண்டியன் கூறியிருப்பது அவரது கருத்து. எங்களைப் போன்ற தலைவர்கள் பாதுகாப்பாக இருக்கிறோம். கடந்த 10 ஆண்டுகளில் அ.தி.மு.க., ஆட்சியில் நடந்த கொலைகளை விட தற்போது குறைவு தான்.போலீசார் என்கவுன்டர் செய்வதில் தவறில்லை. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்த அம்மா உணவகத் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்து மேலும் விரிவுப்படுத்த கூறியது பாராட்டத்தக்கது.மின் கட்டண உயர்வை அரசு திரும்ப பெறவேண்டும். காங்., கட்சியில் உழைப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை