| ADDED : மே 06, 2024 12:17 AM
சிவகங்கை : சிவகங்கையில் நேற்று 5 மையங்களில் நடந்த 'நீட்' எழுத்து தேர்வில் 1,874 மாணவர்களில், 68 பேர் ஆப்சென்ட் ஆகினர். நீண்ட பரிசோதனைக்கு பின்னரே மாணவ, மாணவிகளை தேர்வு அறைக்குள் அனுமதித்தனர். மாணவர் பாதுகாப்பிற்கு தேர்வு மையம் முன் ஆம்புலன்ஸ், போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.மாவட்டத்தில் சிவகங்கை கேந்திரியா வித்யாலயா, சுந்தரநடப்பு மான்போர்ட் சி.பி.எஸ்.சி., திருப்புவனம் லாடனேந்தல் வேலம்மாள் பள்ளி, காரைக்குடி கேந்திரிய வித்யாலயா, செட்டிநாடு பப்ளிக் பள்ளி ஆகிய 5 மையங்களில் நேற்று மதியம் 2:00 மணி முதல் மாலை 5:20 மணி வரை 'நீட்' தேர்வு நடைபெற்றது. இதில், பங்கேற்க நேற்று காலை 11:00 மணியில் இருந்து மதியம் 1:00 மணி வரை மாணவ, மாணவிகள் தேர்வு மையம் முன் கூடினர். அவர்களை பலத்த சோதனைக்கு பின் தேர்வு அறைக்குள் அனுமதித்தனர். இத்தேர்வில் 1,874 மாணவர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில், 1,806 மாணவர்கள் மட்டுமே தேர்வெழுதினர். இத்தேர்வில் 68 மாணவ, மாணவிகள் ஆப்சென்ட் ஆகினர்.