உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பா.ஜ., வேட்பாளருக்கு ஆதரவாக கூட்டணி கட்சி பிரசாரம் தீவிரம்

பா.ஜ., வேட்பாளருக்கு ஆதரவாக கூட்டணி கட்சி பிரசாரம் தீவிரம்

சிவகங்கை : அ.ம.மு.க., மற்றும் அ.தி.மு.க., தொண்டர் மீட்பு குழுவினர் அந்தந்த தொகுதியில் கூட்டணி கட்சிகளுக்கு தேர்தல் பணியாற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியில் சிவகங்கை தொகுதியில் பா.ஜ., கூட்டணி வேட்பாளராக தேவநாதன் போட்டியிடுகிறார். இத்தொகுதியில் காங்., மற்றும் அ.தி.மு.க., வேட்பாளர்கள் தேர்தல் களத்தில்முந்தி செல்லும் நிலையில், தொடர்ந்து பா.ஜ., மற்றும் சற்று பின்னடைவில் உள்ளது. மேலும், சிவகங்கை தொகுதிக்கு உட்பட்ட அ.ம.மு.க., மற்றும் அ.தி.மு.க., தொண்டர் மீட்பு குழுவினர் தங்கள் தலைவர்கள் போட்டியிடும் ராமநாதபுரம், தேனியில் தேர்தல் பணிகளுக்கு சென்றுவிட்டதால், சிவகங்கை தொகுதியில் கூட்டணி கட்சிகளுக்கு தேர்தல்பணி ஆற்றவில்லை என்ற அதிருப்தி நிலை நீடித்து வருகிறது. இதை தவிர்த்து, பா.ஜ., வேட்பாளரின் வெற்றிக்கு பாடுபட வேண்டும் என்ற நோக்கத்தில், தேனி மற்றும்ராமநாதபுரம் தொகுதியில் உள்ள பன்னீர்செல்வம், தினகரன் ஆதரவாளர்கள் அனைவரையும் சிவகங்கையில் தேர்தல் பணியாற்ற செல்லுமாறு அக்கட்சி தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இதையடுத்து, பா.ஜ., கூட்டணியில் அங்கம் வகிக்கும் அ.ம.மு.க., மற்றும் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்தின் அ.தி.மு.க., தொண்டர்மீட்பு குழுவினர் சிவகங்கை லோக்சபா தொகுதியில் தேர்தல் பணிகளில் ஈடுபட துவங்கியுள்ளனர். இதன் மூலம் பா.ஜ., வேட்பாளர் தேவநாதன் உற்சாகம் அடைந்துஉள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை