உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / இடிந்து விடும் நிலையில் நிழற்கூரை

இடிந்து விடும் நிலையில் நிழற்கூரை

காரைக்குடி: சாக்கோட்டை ஒன்றியம் பெத்தானேந்தலில் நுாற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இங்குள்ள புகழ்பெற்ற தர்காவிற்கு, பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் வந்து செல்கின்றனர். கடந்த பல வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட பஸ் ஸ்டாப் உள்ளது. பஸ் ஸ்டாப்பின் கூரை சிதிலமடைந்து கிடக்கிறது. கூரை இடிந்து விழும் நிலையில் உள்ளதால் பயணிகள் அச்சமடைந்துள்ளனர். விபத்து ஏற்படும் முன்பு சிதிலமடைந்த பஸ் ஸ்டாப்பை பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை