உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சிப்காட்டில் செயல்படாத குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் தண்ணீர் கிடைக்காமல் அவதி

சிப்காட்டில் செயல்படாத குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் தண்ணீர் கிடைக்காமல் அவதி

மானாமதுரை: மானாமதுரை சிப்காட் பகுதியில் செயல்பட்டு வந்த குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக செயல்படாமல் உள்ளதால் அப்பகுதி மக்கள் குடிநீர் கிடைக்காமல் சிரமப்பட்டு வருகின்றனர். கல்குறிச்சி ஊராட்சிக்குட்பட்ட சிப்காட் பகுதியில் 2016ம் ஆண்டு கனிமநிதி திட்டத்தின் கீழ் ரூ.6.30 லட்சம் செலவில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் துவங்கப்பட்டது.இதில் ரூ. 5க்கு ஒரு குடம் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மக்களுக்கு வழங்கப்பட்டு வந்தது. சிப்காட், செய்களத்துார், கள்ளர்வலசை, நத்தபுரக்கி, மகாலட்சுமி நகர் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த மக்கள் குடிநீரை பிடித்துச் சென்றனர். கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக சுத்திகரிப்பு நிலையம் பழுதடைந்ததை தொடர்ந்து தற்போது பூட்டி கிடக்கிறது. இதனை மீண்டும் பழுது பார்த்து செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை