உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மனுக்களாக அதிகாரிகளிடம் தந்த பேப்பர் 3 கிலோ தேறும் நடவடிக்கை தான் இல்லை: குறைதீர் கூட்டத்தில் புகார்  

மனுக்களாக அதிகாரிகளிடம் தந்த பேப்பர் 3 கிலோ தேறும் நடவடிக்கை தான் இல்லை: குறைதீர் கூட்டத்தில் புகார்  

சிவகங்கை ; கண்மாய் துார்வாரக்கோரி ஒவ்வொரு விவசாயியும் தந்த மனுக்களை எடைக்கு போட்டால், தலா 3 கிலோ எடை தேறும்.இருப்பினும் மனுக்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்க அதிகாரிகள் முன்வருவதில்லை என சிவகங்கையில் நேற்று நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் ஆதங்கப்பட்டனர்.சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடந்தது. கலெக்டர் ஆஷா அஜித் தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் மோகனச்சந்திரன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சிவராமன் முன்னிலை வகித்தனர். வேளாண்மை இணை இயக்குனர் (பொறுப்பு) லட்சுமிபிரபா வரவேற்றார். கூட்டுறவு இணை பதிவாளர் ராஜேந்திர பிரசாத், மத்திய கூட்டுறவு வங்கி நிர்வாக இயக்குனர் உமாமகேஸ்வரி, பொது மேலாளர் ஜெயப்பிரகாஷ், மாவட்ட வழங்கல் அலுவலர் சபிதாள் பேகம், சிவகங்கை கோட்டாட்சியர் விஜயகுமார் பங்கேற்றனர்.சந்திரன், இந்திய கம்யூ., சிவகங்கை:முன்னாள் கலெக்டர் வாங்கி வைத்த 21 மண் அள்ளும் இயந்திரம் பயன்பாடின்றி கிடக்கிறது. இதை விவசாயிகள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.கலெக்டர்:இயந்திரங்கள் சீரமைக்கும் பணி நடக்கிறது. விரைவில் விவசாய பயன்பாட்டிற்கு வரும்.கோபால், வழக்கறிஞர், அல்லிநகரம்:திருப்புவனம், பனையனேந்தல் கண்மாய் 50 ஆண்டாக துார்வாரப்படாமல் கிடக்கிறது. இக்கண்மாயை துார்வாரக்கோரி கடந்த 2 ஆண்டாக மனு அளித்துள்ளேன். நான் வழங்கிய மொத்த மனுக்களையும் எடைக்கு போட்டால் 3 கிலோ வரை தேறும். ஆனால், அதிகாரிகள் நடவடிக்கை தான் எடுப்பதில்லை.கருப்பையா, பா.ஜ., செங்குளிபட்டி:மாவட்ட அளவில் கண்மாய்கள், வரத்து கால்வாய்கள் ஆக்கிரமிப்பில் உள்ளன. அவற்றை துார்வாராமல் விட்டதால், மழை பெய்தும் 95 சதவீத கண்மாய்களில் நீர் தேங்கவில்லை.அய்யாச்சாமி, தி.மு.க., கீழநெட்டூர்:சுப்பன் கால்வாயை துார்வாரி, சீரமைக்க ரூ.8 கோடி ஒதுக்கியும், பணிகள் நடக்கவில்லை. செய்களத்துார் முதல் மானாமதுரை வரை வரத்து கால்வாய் ஆக்கிரமிப்பில் உள்ளன. கழிவு நீரை கால்வாய்க்குள் விடுவதால், அவை வைகை ஆற்றில் கலக்கின்றன.கலெக்டர் :மாவட்ட அளவில் 215 கண்மாய்களில் இருந்து விவசாயிகள் கிராவல் மண் எடுக்க அனுமதி வழங்கப்பட உள்ளது. முதல்வர் ஸ்டாலின் ஜூலை 3 ம் தேதி இதற்கென ஆன்லைன் வெப்சைட்டை திறக்க உள்ளார். அதற்கு பின் விவசாயிகள் அதில் பதிவு செய்து, கிராவல் மண் எடுக்கலாம்.சந்திரன், சிவகங்கை: அதப்படக்கி, சூராணம், சாக்கூர், நாமனுார் உட்பட தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்களில் நடந்துள்ள முறைகேடு மீது தகுந்த நடவடிக்கையை அதிகாரிகள் மீது எடுக்க வேண்டும்.வீரபாண்டியன், மானாமதுரை:மானாமதுரை அருகே தெற்கு சந்தனுாரில் தரிசு நிலம் 1000 ஏக்கரை பட்டா போட்டு வெளிமாநிலத்தவர்களுக்கு விற்பனை செய்து வருகின்றனர். இதை தடுத்து நிறுத்த வேண்டும்.சிவராமன், திட்ட இயக்குனர், சிவகங்கை:தேசிய ஊரக வேலை திட்டத்தின் கீழ் ஏரி, குளம், வரத்து கால்வாய் துார்வார இப்பணியாளர்களை நியமிக்க தடை விதித்தனர். புதிதாக சமுதாய கண்மாய் துார்வாருதல், மரக்கன்று நடுதல், பள்ளி வளாக விரிவாக்கம் தான் செய்ய முடியும். கடந்த ஆண்டு 1267 மடைகள் சீரமைக்க எடுத்து, ரூ.66.51 கோடிக்கான பணிகளை செய்தோம். அதில், 384 மடைகள் பணி செய்யாததால், அதற்கான பணம் திரும்ப சென்றது.கிருஷ்ணதேவர், மானாமதுரை:நாள் ஒன்றுக்கு மானாமதுரை வழியாக 1200 பஸ்கள் சென்று வருகின்றன. ஆனால், ஒரு பஸ் கூட பாலத்திற்கு கீழே வந்து செல்வதில்லை. குறிப்பாக மதுரை -- ராமநாதபுரம், ராமேஸ்வரம் போன்ற பஸ்கள் பாலத்தின் மேலே செல்வதால் பயணிகள் சிரமம் அடைகின்றனர். தாயமங்கலம் -மானாமதுரை இடையே பஸ் இயக்க வேண்டும்.கலெக்டர்:இது குறித்துவட்டார போக்குவரத்து அலுவலர், அரசு போக்குவரத்து கழகம், நெடுஞ்சாலைத்துறையினர் இணைந்து, மானாமதுரையில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.கோபால், விவசாயி, மறவமங்கலம்:சிவகங்கை அரசு மருத்துவமனையில் தலை, நரம்பியல், இதயம் சார்ந்த சிகிச்சைக்கு டாக்டர்கள் இன்றி, ஆரம்ப சுகாதார நிலையத்தை விட மிக மோசமான நிலையில் உள்ளது. இதனால், நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் தவிக்கின்றனர்.நடராஜன், விவசாயி,காளையார்கோவில்: தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்களில் விவசாயிகளின் வங்கி கணக்குடன் ஆதார், பான் கார்டு இணைக்க வேண்டும் என்கின்றனர். இதனால், பிரதமரின் நிதி உதவி ரூ.2000 கிடைக்காமல் போய்விடுமோ என்ற அச்சம் விவசாயிகளிடம் நிலவுகிறது.இவ்வாறு விவாதம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ