உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சிங்கம்புணரி கடைவீதியில் சிக்னல் இல்லை தினமும் திணறும் போக்குவரத்து போலீசார்

சிங்கம்புணரி கடைவீதியில் சிக்னல் இல்லை தினமும் திணறும் போக்குவரத்து போலீசார்

சிங்கம்புணரி: சிங்கம்புணரியில் வாகனப் போக்குவரத்து மிகுந்த இடத்தில் சிக்னல் இல்லாததால் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க முடியாமல் போலீசார் சிரமப்படுகின்றனர்.இப்பேரூராட்சியில் நான்கு ரோடு சந்திப்பு பகுதியில் போக்குவரத்து நெரிசலால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் பாதிக்கப்படுவது தொடர்கதையாகி வருகிறது. மாவட்டத்தில் தொழில், வாகனப் போக்குவரத்து மிகுந்த நகரமாக இப்பேரூராட்சி வளர்ந்து வரும் நிலையில் நான்கு ரோடு சந்திப்பு பகுதியில் போக்குவரத்தை சரிசெய்ய இங்கு தனியாக போக்குவரத்து போலீசார் நியமிக்கப்பட்டனர். இச்சந்திப்பில் தினமும் காலை மாலை வேளைகளில் போக்குவரத்து நெருக்கடிக்கு மத்தியில் வாகனங்களை ஒழுங்குபடுத்த போலீசார் படாதபாடு படுகின்றனர்.இங்கு நான்கு புறத்தில்இருந்தும் வரும் வாகனங்களுக்கு தெரியும் வகையில் சிக்னல் விளக்கு இல்லை. இதனால் போலீசாரின் பணியையும் மீறி வாகனங்கள் நெரிசலில் சிக்கி மோதிக் கொள்கின்றன. போலீசார் கண் முன்னே விபத்து நடந்து வருகிறது. குறிப்பாக வாரச்சந்தை தினமான வியாழக்கிழமை நான்கு ரோடு சந்திப்பில் நீண்ட நேரம் நெரிசல் ஏற்பட்டு விடுகிறது. வேங்கைப்பட்டி ரோட்டில் வாகனங்கள் மட்டுமின்றி மக்கள் நடந்து கூட செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். வாகனங்கள் தானாக நின்று செல்லும் வகையில் தானியங்கி சிக்னல் பொருத்தினால் மட்டுமே நெரிசலையும், விபத்துகளையும் தடுக்க முடியும். எனவே நான்கு ரோடு சந்திப்பு மற்றும் வேங்கைப்பட்டி சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றி சிக்னல் விளக்கு அமைக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை