உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / போலி ஆவணம் மூலம் பாஸ்போர்ட் பெற முயற்சி மூன்று பேர் கைது

போலி ஆவணம் மூலம் பாஸ்போர்ட் பெற முயற்சி மூன்று பேர் கைது

சிவகங்கை:தேவகோட்டை லாட்ஜில் தங்கி போலி பாஸ்போர்ட் எடுக்க இந்தியர் என்பதற்கான ஆவணம் தயாரித்த இலங்கையை சேர்ந்த 3 பேரை கியூ பிரிவு போலீசார் கைது செய்தனர்.இலங்கை, தம்காலா ராடம்பலா காமேஜ் மகன் சமிதா எரண்டா 30. அம்பலம்கோடா ஜெயசேகரா மகன் துஷான் பிரதீப் 36, தேவகோட்டை அருகே வெட்டிவயல் சுப்பிரமணியன் மகன் கருப்பையா (எ) சிவா 43, இலங்கையை சேர்ந்த சென்னையில் வசித்து வரும் செந்துாரான், முகமது அஸ்லாம் ஆகிய 5 பேரும் சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை தாணிச்சாவூரணி ரோட்டில் உள்ள லாட்ஜில் தங்கியுள்ளனர். அங்கிருந்தபடியே இந்தியாவை சேர்ந்தவர்கள் என்பதற்குரிய போலி ஆதார், ரேஷன் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை தயாரித்து பாஸ்போர்ட் பெற முயற்சித்தனர்.ராமநாதபுரம் கியூ பிரிவு டி.எஸ்.பி., பாண்டி, சிவகங்கை எஸ்.ஐ., செல்லமுத்துவிற்கு தகவல் கிடைத்தது. நேற்று காலை லாட்ஜிற்கு சென்ற 'கியூ' பிரிவு போலீசார் அங்கிருந்த சமிதா எரண்டோ 30, துஷாந்த் பிரதீப் 36, கருப்பையா (எ) சிவா 43 ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். மற்ற இருவரையும் தேடி வருகின்றனர்.கியூ பிரிவு போலீசார் கூறும்போது, யாருக்காக போலி ஆவணங்கள், பாஸ்போர்ட் பெற முயற்சித்தார்கள், யார் யார் உதவினர் என விசாரிக்கிறோம் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை