உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மும்முனை மின்சாரம் கட் ; குடிநீர் விநியோகம் பாதிப்பு

மும்முனை மின்சாரம் கட் ; குடிநீர் விநியோகம் பாதிப்பு

சிங்கம்புணரி : சிங்கம்புணரி அருகே மும்முனை மின்சாரம் வழங்காததால் ஊராட்சியில் குடிநீர் விநியோகம் பாதிக்கப்படுகிறது. இவ்வொன்றியத்தில் மருதிப்பட்டி ஊராட்சியில் சில நாட்களாக இரவு நேரத்தில் மும்முனை மின்சாரம் முழுவதும் வழங்கப்படுவதில்லை. இதனால் விவசாய மின் மோட்டார்கள், ஊராட்சி நிர்வாகத்தின் குடிநீர் தொட்டிகளுக்கு நீரேற்றும் மோட்டார் செயல்படுவதில்லை.இதனால் காலையில் ஊராட்சிகள் மூலம் வீடுகளுக்கும், பொதுக் குழாய்களுக்கும் குடிநீர் விநியோகம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பகல் நேரத்தில் ஏற்றப்படும் தண்ணீர் குறைந்த அளவு வீடுகளுக்கே செல்கிறது.கோடை வெயில் வாட்டியெடுக்கும் நிலையில் அப்பகுதி மக்கள் ஒரு வாரமாக தண்ணீர் பற்றாக்குறை காரணமாக அவதியில் உள்ளனர்.மேலும் மும்முனை மின்சாரத்தை நம்பி கோடை சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே மும்முனை மின்சாரத்தை நிறுத்தாமல் வழங்க விவசாயிகளும் பொதுமக்களும் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி