உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / திருஞானசம்பந்தர் குருபூஜை விழா

திருஞானசம்பந்தர் குருபூஜை விழா

திருப்புவனம், : திருப்புவனம் புஷ்பவனேஷ்வரர் சவுந்தரநாயகி அம்மன் கோயிலில் திருஞானசம்பந்தரின் குருபூஜை விழா நேற்று முன்தினம் நடந்தது. திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற ஸ்தலம் திருப்புவனம் புஷ்பவனேஷ்வரர் ஆலயம், இங்கு திருஞானசம்பந்தருக்கு என தனி சன்னதி உண்டு. ஆண்டுதோறும் வைகாசியில் வேலப்ப தேசிகர் திருக்கூட்டம் சார்பில் குருபூஜை நடத்தப்படுவது வழக்கம்.இந்தாண்டு குருபூஜை விழா நேற்று முன்தினம் மாலை ஆறு மணிக்கு நால்வர் சன்னதியில் அபிஷேக ஆராதனையுடன் தொடங்கியது. தொடர்ந்து திருமுறை விண்ணப்பம்,பக்தி சொற்பொழிவு முடிந்து தீபாராதனை காட்டப்பட்ட உடன் திருஞானசம்பந்தர் உற்ஸவ புறப்பாடும் நடந்தது. இரவு 8:00 மணிக்கு அன்னதானம் அளித்தனர். ஏற்பாட்டை வேலப்ப தேசிகர் திருக்கூட்டம் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை