உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கோடை வெயிலால் இழப்பை சந்திக்கும் வியாபாரிகள்

கோடை வெயிலால் இழப்பை சந்திக்கும் வியாபாரிகள்

திருப்புவனம்: தமிழகம் முழுவதும் வாட்டி வதைத்து வரும் கோடை வெயில் சிறு வியாபாரிகளை அதிகளவில் பாதித்து வருகிறது.திருப்புவனத்தில் 50க்கும் மேற்பட்ட சிறு வியாபாரிகள் மதுரையில் இருந்து காய்கறிகள், பழங்கள், கீரைகள் உள்ளிட்டவற்றை வாங்கி வந்து திருப்புவனத்தில் விற்பனை செய்வது வழக்கம்.மார்க்கெட்டில் தினசரி காய்கறிகள், பழங்கள் உள்ளிட்டவற்றை அன்றாடம் விற்பனை செய்வதால் பழங்கள், காய்கறி, கீரை உள்ளிட்டவை புத்தம் புதிதாக இருக்கும். எனவே மக்களும் விரும்பி வாங்குவார்கள். சிறு வியாபாரிகளுக்கு காய்கறி, கீரை வியாபாரம் மூலம் கிடைக்கும் வருவாயை நம்பியே உள்ளனர். கடந்த சில மாதங்களாக நிலவி வரும் கோடை வெயில் காரணமாக காய்கறிகள், பழங்கள், கீரைகள் விரைவில் வீணாகி விடுகின்றன. போதிய வியாபாரம் இன்றி நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்.வியாபாரிகள் கூறுகையில், மதுரைக்கு அதிகாலை நான்கு மணிக்கு சென்று அகத்தி கீரை, சிறு கீரை, தண்டு கீரை உள்ளிட்ட கீரை வகைகளை வாங்கி விற்பனை செய்கிறோம். காலை ஏழு மணிக்கே வெயிலின் தாக்கம் அதிகமிருப்பதால் கீரைகள் காய்ந்து விடுகிறது. வாடிக்கையாளர்கள் பழைய கீரை என வாங்க மறுக்கின்றனர். தினசரி வட்டிக்கு வாங்கி கீரை விற்பனையில் ஈடுபட்டு வருகிறோம், அனைத்தும் விற்பனை செய்தால் தான் லாபம் கிடைப்பதுடன் மறுநாள் வியாபாரம் செய்ய முடியும், கீரைகள் மட்டுமல்ல காய்கறிகள், பழங்களும் வெயில் காரணமாக வீணாகி வருகின்றன என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை