உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / வேன் மோதியதில் டூவீலரில் சென்றவர் பலி

வேன் மோதியதில் டூவீலரில் சென்றவர் பலி

கீழச்சிவல்பட்டி: திருப்புத்துார் ஒன்றியம் கீழச்சிவல்பட்டி அருகில் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற டூவீலர் மீது வேன் மோதியதில் டூ வீலரில் சென்றவர் இறந்தார்.சேவினிப்பட்டியைச் சேர்ந்தவர் ராமன் மகன் ஆண்டியப்பன் 52. இவர் திருப்புத்துாரிலிருந்து திருமயம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் கீழச்சிவல்பட்டிக்கு முன் உணவகம் நடத்துகிறார். நேற்று காலை கீழச்சிவல்பட்டிக்கு டூவீலரில் சென்று உணவகத்திற்கு விறகு வாங்கி வந்தார். மதியம் 12:00 மணிக்கு கீழச்சிவல்பட்டி ரோட்டிலிருந்து திரும்பி தேசிய நெடுஞ்சாலையில் டூவீலரில் வந்த போது, பின்புறம் சென்னையிலிருந்து பிள்ளையார்பட்டிக்கு சென்ற வேன் மோதியது. அதில் படுகாயம் அடைந்த ஆண்டியப்பன் இறந்தார். கீழச்சிவல்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை