உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மானாமதுரை நகராட்சியில் ஆய்வாளர் பணியிடம் காலியால் பணிகள் பாதிப்பு

மானாமதுரை நகராட்சியில் ஆய்வாளர் பணியிடம் காலியால் பணிகள் பாதிப்பு

மானாமதுரை: மானாமதுரை நகராட்சியில் நகரமைப்பு ஆய்வாளர், துாய்மைஆய்வாளர், பணித்தள மேற்பார்வையாளர் பணியிடங்கள் காலியாக இருப்பதால் பெரும்பாலான பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.மானாமதுரை பேரூராட்சி கடந்த 2 வருடங்களுக்கு முன்பு நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு தற்போது 27 வார்டுகள் உள்ளன. நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டதிலிருந்து பணியாளர்கள் பற்றாக்குறை காரணமாக அனைத்து பணிகளிலும் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.கடந்த 2வருடங்களாக நகரமைப்பு ஆய்வாளர் பணியிடம் காலியாக இருப்பதால் மாற்றுப் பணியில் வாரத்திற்கு ஒரு நாள் மட்டும் வேறு நகராட்சியிலிருந்து இங்கு வந்து செல்கின்றனர்.அதே போன்று துாய்மை பணியாளர் பணியிடம் காலியாக இருப்பதால் நகரில் துாய்மை பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும் பணித்தள மேற்பார்வையாளர் பணியிடமும் காலியாக இருப்பதால் பணிகளில் தொய்வு ஏற்பட்டு வருகிறது.மாவட்ட நிர்வாகம் உடனடியாக மானாமதுரை நகராட்சியில் காலியாக உள்ள பணியிடங்களில் ஊழியர்களையும், அதிகாரிகளையும் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை