உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / வேம்படி நாகாத்தம்மன் பால்குட விழா

வேம்படி நாகாத்தம்மன் பால்குட விழா

மானாமதுரை: மானாமதுரை சங்கு விநாயகர் கோயில் தெருவில் உள்ள வேம்படி நாகாத்தம்மன் கோயில் ஆடி மாத பவுர்ணமி மற்றும் பால்குட விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் சுவாமிக்கு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.நேற்று பவுர்ணமியை முன்னிட்டு அதிகாலை சுவாமிகளுக்கு பால்,பன்னீர், புஷ்பம், சந்தனம்,குங்குமம்,திரவியம் உள்ளிட்ட 18 வகையான பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. பக்தர்கள் வைகை ஆற்றுக்குச் சென்று அங்கிருந்து பால் குடங்களை சுமந்து கொண்டு நகரின் முக்கிய வீதிகளின் வழியே ஊர்வலமாக கோயிலுக்கு வந்த அம்மனுக்கு அபிேஷகம் செய்தனர். அன்னதானம் நடந்தது. 108 திருவிளக்கு பூஜை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ