உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / லோக்சபா தேர்தலில் காங்.,க்கு 15 தொகுதி ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் பேட்டி

லோக்சபா தேர்தலில் காங்.,க்கு 15 தொகுதி ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் பேட்டி

சிவகங்கை,:''2024 லோக்சபா தேர்தலில் தி.மு.க., கூட்டணியில் காங்.,க்கு தமிழகத்தில் 15 தொகுதிகளை கேட்க முடிவு செய்துள்ளோம்,'' என சிவகங்கையில் காங்., ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் கே.ஆர்.ராமசாமி தெரிவித்தார்.அவர் கூறியதாவது: காங்., ல் பிரதமர் வேட்பாளர் என ராகுலை விட தகுதியான ஒருவரை எப்படி அறிவிக்க முடியும். அப்படிப்பட்ட சூழலில் தான் காங்., கட்சி உள்ளது. தமிழக அரசை பொறுத்தமட்டில், சட்டம் ஒழுங்கு சீர்கேடாக தான் உள்ளது. தமிழக அரசு இந்த விஷயத்தில் தனி கவனம் செலுத்த வேண்டும். சிவகங்கை மாவட்டத்தில் போலீஸ் கண்டுபிடிக்காமல் பல கொலை வழக்குகள் உள்ளன. இது குறித்து முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்றேன். தேவகோட்டை அருகே கண்ணங்கோட்டையில் 2 பேர் கொலையில் இது வரை குற்றவாளிகள் யார் என்றே போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை. நகைகளையும் மீட்கவில்லை. மற்ற மாநிலத்தோடு ஒப்பிடுகையில் தமிழக அரசு நன்றாக செயல்படுகிறது.ஜன., 29ல் தி.மு.க.,- காங்., தொகுதி உடன்பாடு ஆலோசனை கூட்டம் நடக்கிறது. தமிழ்நாட்டில் ஓட்டுக்காக பணம் வாங்கும் மக்கள் இருக்கும் வரை, நாடு முன்னேற்றம் பெறுவது மிக கஷ்டம். கடந்த லோக்சபா தேர்தலில் காங்., சார்பில் சிவகங்கையில் போட்டியிட்டவர் ஓட்டுக்கு பணம் தரவில்லை. தேர்தலில் காங்., சார்பில் நிச்சயமாக ஓட்டுக்கு பணம் தரமாட்டோம். வேறு யாருக்கு மக்கள் ஓட்டு போட போகிறார்கள் என தெரியவில்லை. அதையும் தாண்டி எங்களுக்கு ஓட்டளிக்க விரும்பினால், ஓட்டு போடுங்கள். தமிழகத்தில் பா.ஜ.,விற்கு ஓட்டு வங்கி உள்ளதா. தி.மு.க.,- காங்., கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும். லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் காங்.,க்கு 15 தொகுதி கிடைக்கும். சிவகங்கையில் மீண்டும் போட்டியிட கார்த்தி எம்.பி.,க்கு வாய்ப்பு கிடைத்தால், காங்.,-ன் வெற்றிக்கு நிச்சயம் பாடுபடுவோம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை