உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சாரல் மழைக்கு முளைத்த நெற்பயிர் கல்லலில் 500 ஏக்கர் பாதிப்பு 

சாரல் மழைக்கு முளைத்த நெற்பயிர் கல்லலில் 500 ஏக்கர் பாதிப்பு 

சிவகங்கை: கல்லல் ஒன்றியத்தில் கடந்த வாரம் பெய்த சாரல் மழைக்கு விளைந்த நெற்பயிர்கள் சாய்ந்து முளைத்து விட்டதால், 500 ஏக்கர் பாதித்துள்ளதுகல்லல் ஒன்றியம் குருந்தம்பட்டு, சேந்தனி வயல், ஏம்பாவயல், ஆலம்பட்டு, பிராணிவயல், கள்ளிப்பட்டு, சாத்தனுார், பட்டமங்கலம், நடுவிக்கோட்டை உள்ளிட்ட பகுதியில் 500 க்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள் நெல் நடவு செய்திருந்தனர்.இந்நிலையில் நன்கு விளைந்து அறுவடைக்கு தயாரான நிலைக்கு நெற்பயிர்கள் வளர்ந்திருந்தன. கடந்த வாரம் பெய்த சாரல் மழைக்கு முளைத்த நெற்பயிர்கள் அப்படியே சாய்ந்து விட்டன.மழை நீரில் நனைந்த நெற்பயிர்கள் முளைத்து விட்டன. இதனால், முளைத்த நெற்பயிர்களை அறுவடை செய்ய முடியாத நிலை விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக குருந்தம்பட்டு பெருங்கரை வயலில் நெற்பயிர்கள் முற்றிலும்முளைத்து, வீணாகி விட்டது.நிவாரணம் கோரிக்கை: தமிழ்நாடு விவசாய சங்க செயலாளர் ஆறுமுகம் கூறியதாவது:கல்லல் ஒன்றியத்தில் 500 க்கும் மேற்பட்ட ஏக்கரில் நெல் நடவு செய்திருந்தனர். அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில், சாரல் மழைக்கு நெற்பயிர்கள் நனைந்து முளைத்துவிட்டன. இதனால், அறுவடை செய்தாலும் நெல்லை எடுக்க முடியாத நிலை விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளது. வேளாண்மை துறையினர் கல்லல் ஒன்றியத்தில் கள ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட நெல் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ