உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / தொன்மை, நவீனத்தை இணைக்கும் பாலம்: திரைப்பட இயக்குனர் கருத்து

தொன்மை, நவீனத்தை இணைக்கும் பாலம்: திரைப்பட இயக்குனர் கருத்து

காரைக்குடி : காரைக்குடி அழகப்பா பல்கலை.,யில் ஆங்கிலம் மற்றும் அயல் மொழிகள் துறை சார்பில் பன்னாட்டு கருத்தரங்கம் நடந்தது.கருத்தரங்கில் ஆங்கிலத் துறை தலைவர் மதன் வரவேற்றார். பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த திரைப்பட இயக்குனர் சில்வெய்ன், மற்றும் பெண் இசையமைப்பாளர் ஜோயல் பேசினர்.திரைப்பட இயக்குனர் சில்வெய்ன் பேசுகையில்:பிரெஞ்ச் திரைப்படங்கள் சமகால கதை கருத்துக்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதோடு பிரான்ஸ் நாட்டின் தொன்மைக்கும் பழமைக்கும் பாரம்பரியத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கின்றன.பழங்கால பிரான்ஸ் தேச இலக்கிய படைப்புகள் தற்போதைய திரைப்படங்களுக்கு கருத்துக்களை வழங்கும் அறிவு பொக்கிஷமாக உள்ளது. இளைய தலைமுறையினர் முன்னோர்களின் வாழ்வியல் முறைகளை ஆன்மிக நம்பிக்கைகளை, வேளாண்மை செயல்முறைகளை தற்போது திரைப்படங்களாக உருவாக்கப்படும் தொன்ம இலக்கிய படைப்புகளிலிருந்து கற்றுக் கொள்கின்றனர். பாரம்பரிய நாடகக்கலை நவீன திரைப்படங்களாக பரிமாண வளர்ச்சி அடைந்துள்ளன. தொன்மையையும் நவீனத்தையும் இணைக்கும் பாலமாக பிரெஞ்ச் திரைப்படங்கள் உள்ளன என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை