உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / திருப்புவனத்தில் பாராக மாறிய விளையாட்டு மைதானம்

திருப்புவனத்தில் பாராக மாறிய விளையாட்டு மைதானம்

திருப்புவனம் : திருப்புவனம் அரசு ஆண்கள் பள்ளி விளையாட்டு மைதானத்தை குடிமகன்கள் பலரும் பாராக பயன்படுத்துவதால் விளையாட்டு வீரர்கள் பலரும் முகம் சுழிக்கின்றனர்.திருப்புவனம் அரசு ஆண்கள் பள்ளியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர்.பள்ளிக்கு எதிரே விளையாட்டு மைதானம் அமைந்துள்ளது. மாணவர்கள் பலரும் மைதானத்தில் தடகள போட்டிகளுக்கு பயிற்சி எடுத்து வருகின்றனர்.மேலும் விளையாட்டு மைதானம் இல்லாததால் அரசு பெண்கள் பள்ளியை சேர்ந்த மாணவிகளும் இங்கு பயிற்சி பெறுகின்றனர்.பள்ளி மைதானத்தை சுற்றிலும் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டிருந்தும் இரவில் குடிமகன்கள் மைதானத்தை மது பார்களாக பயன்படுத்துகின்றனர்.மது போதையில் பாட்டில்களை உடைத்து விட்டு செல்வதால் மாணவர்கள் சிரமம் அடைகின்றனர். உடைந்து கிடக்கும் கண்ணாடி பாட்டில் சிதறல்களால் பாதங்கள் பாதிக்கப்பட்டு போட்டிகளில் பங்கேற்பதே கேள்விகுறியாகி வருகிறது.எனவே விளையாட்டு மைதானத்திற்கு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட வேண்டும், போலீசாரும் இரவு நேரத்தில் விளையாட்டு மைதானம் பகுதியில் ரோந்து பணிகளை மேற்கொண்டு குடிமகன்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி