உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மாணவர் சேர்க்கை ஊர்வலம்

மாணவர் சேர்க்கை ஊர்வலம்

சிவகங்கை : சிவகங்கை நகராட்சி நடுநிலைப் பள்ளியில் மாணவர் சேர்க்கை ஊர்வலம் நடந்தது. தொடக்கக் கல்வி மாவட்ட கல்வி அலுவலர் மாரிமுத்து தலைமை வகித்தார். வட்டார கல்வி அலுவலர் இந்திராணி முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் மரிய செல்வி வரவேற்றார். முதல் வகுப்பில் 25 மாணவர்கள் சேர்ந்தனர். மாவட்ட கல்வி அலுவலர் மாரிமுத்து முதல் வகுப்பில் சேர்ந்த மாணவர்களை வரவேற்றார். மாவட்ட அளவில் அறிவியல் கண்காட்சியில் முதல் இடத்தைப் பிடித்த மாணவன் பிரித்திவிராஜை மாவட்ட கல்வி அலுவலர் பாராட்டினார்.ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ