உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / புறவழிச்சாலை சந்திப்பில் எரியாத மின்விளக்கு

புறவழிச்சாலை சந்திப்பில் எரியாத மின்விளக்கு

திருப்புத்துார், : திருப்புத்துார்-புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலை புறவழிச்சாலையில் உயர்கோபுர விளக்கு எரியாததால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்குஉள்ளாகின்றனர்.திருமயம்- மானாமதுரை தேசிய நெடுஞ்சாலையில் திருப்புத்துார் நகருக்கு வெளியே புறவழிச்சாலை செல்கிறது. புதுக்கோட்டை, காரைக்குடி, கண்டரமாணிக்கம், திருக்கோஷ்டியூர் ரோடுகள்சந்திக்கின்றன. இந்த சந்திப்புக்களில் உயர் கோபுர மின்விளக்கு பொருத்தப்பட்டுள்ளது. இவை தொடர்ந்து எரிவதில்லை. பல முறை புகார் தெரிவிக்கப்பட்டும் தாமதமாகவே நடவடிக்கை எடுக்கப்படுகிறது. கடந்த 3 மாதங்களாக என்.புதுார் சந்திப்பில் மின்விளக்கு எரியவில்லை. வாகனங்கள் எந்த சாலையில் செல்வது என்ற குழப்பம் காணப்படுகிறது.இந்த சந்திப்புக்களில் உயர்கோபுர மின் விளக்கு எரிவதை தினசரி உறுதி செய்ய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தினர் தொடர் கண்காணிப்பில் இருக்க வாகன ஓட்டுனர்கள் கோரியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை