உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சிவகங்கையில் பயிற்சி மாணவர்கள் பராமரிப்பில்லாத விளையாட்டு விடுதி    

சிவகங்கையில் பயிற்சி மாணவர்கள் பராமரிப்பில்லாத விளையாட்டு விடுதி    

சிவகங்கை, : -சிவகங்கை மாவட்ட விளையாட்டு விடுதி அறைகள் பராமரிப்பின்றி சிதிலமடைந்து கிடப்பதால், பயிற்சி பெறும் மாணவர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் சிவகங்கையில் கடந்த 8 ஆண்டிற்கு முன் மாவட்ட விளையாட்டு அரங்கம் திறக்கப்பட்டது. இங்கு நீச்சல், தடகளம், கால்பந்து உள்ளிட்ட விளையாட்டு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. விளையாட்டில் ஆர்வமுள்ள பள்ளி மாணவர்களுக்கு விடுதியில் தங்கி பயிற்சி பெற, 70 மாணவர் விடுதி அறைகள், அனைத்து வசதிகளுடன் கட்டித்தரப்பட்டுள்ளது. இந்த விளையாட்டு அரங்கை பராமரிக்க மாவட்ட விளையாட்டு அலுவலர் தலைமையில் கிளார்க், கால்பந்து, நீச்சல் பயிற்சியாளர், வாட்ச்மேன், துாய்மை பணியாளர்கள் உள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு கால்பந்து, தடகளம் உள்ளிட்ட பயிற்சி விடுதியில் தங்க வைத்து வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு முதல் கபடி பயிற்சியும் அளிக்க உள்ளனர். * சிதிலமடைந்த விடுதி அறை:நாளை பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், விளையாட்டு விடுதியின் முதல் தளத்தில் உள்ள 16 அறைகள் உரிய பராமரிப்பின்றி, இடிந்தும், கழிவு பொருட்கள் சேகரிக்கும் மையமாக செயல்படுகிறது. இதனால் விடுதிக்கு வரும் மாணவர்கள் ஒரே அறைகளுக்குள் தங்க வேண்டிய நிலை உள்ளது.* நிரந்தர பயிற்சியாளர்கள் இல்லை: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் இங்கு மாவட்ட விளையாட்டு அலுவலர், கால்பந்து பயிற்சியாளர் மட்டுமே நிரந்தர பணியிடமாக உள்ளது. தடகளம், நீச்சல், கபடி உள்ளிட்ட விளையாட்டுக்களுக்கு பயிற்சி அளிக்க நிரந்தர பயிற்சியாளர்கள் இல்லை. விடுதி மாணவர்கள் உரிய பயிற்சியை பெற முடியாமல் தவிக்கும் சூழல் ஒவ்வொரு ஆண்டும் ஏற்பட்டு வருகிறது. இதனாலேயே மாநில, தேசிய போட்டிகளில் பங்கேற்க முடியாமல் சிவகங்கை விளையாட்டு வீரர்கள் தவிக்கின்றனர். * அமைச்சர் கவனம் அவசியம்: இத்துறையின் அமைச்சர் உதயநிதி, கடந்த சில மாதங்களுக்கு முன் இந்த விளையாட்டு அரங்கிற்கு வந்து, அடிப்படை வசதிகளை மேம்படுத்த உத்தரவிட்டார். ஆனால், தொடர்ந்து சிவகங்கை மாவட்ட விளையாட்டு அரங்கிற்கு போதிய மாணவர்கள் சேர்க்கை இல்லை. மேலும் விடுதி அறைகள், மாணவிகளின் கழிப்பிடம் உள்ளிட்டவை பராமரிப்பின்றி முதல் தளத்தில் சிதிலமடைந்து கிடப்பது தான் மாணவர்களை வேதனைக்கு உள்ளாக்கியுள்ளது. //


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை