உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சித்த மருத்துவத்தில் ஆயுஷ் பிரிவில் பணியிடங்களுக்கு விண்ணப்பம்

சித்த மருத்துவத்தில் ஆயுஷ் பிரிவில் பணியிடங்களுக்கு விண்ணப்பம்

சிவகங்கை : தேசிய நலவாழ்வு குழுமத்தின் மூலமாக சிவகங்கை மாவட்ட சித்த மருத்துவ அலுவலரின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள ஆயுஷ் பிரிவுகளில் காலியாக உள்ள ஒப்பந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.1.மருத்துவ அலுவலர் (ஆயுஷ்) காலிப்பணியிடம் 2 ,கல்வி தகுதி (சித்தா மருத்துவ பட்டப்படிப்பில் முதுகலை அல்லது இளங்கலை பட்டம்)2.மருந்தகர் காலிப்பணியிடம் 3, கல்வி தகுதி ஒருங்கிணைந்த சித்தா, ஆயுர்வேதா மருந்தாளுநர் பட்டயப்படிப்பு3.பல்நோக்கு பணியாளர் காலிப்பணியிடம் 11, எட்டாம் வகுப்பு தேர்ச்சி / பத்தாம் வகுப்பு தேர்ச்சியின்மை அதற்கு கீழ்.4.ஆயுஷ் ஆலோசகர் காலிப்பணியிடம் 1, கல்வித் தகுதி யோகா நேச்சுரோபதி மருத்துவ பட்டப்படிப்பில் முதுகலை அல்லது இளங்கலை பட்டம்.5.ஆயுஷ் மருத்துவர் (சித்தா) காலிப்பணியிடம் 3, கல்வித் தகுதி சித்தா மருத்துவ பட்டப்படிப்பில் முதுகலை அல்லது இளங்கலை பட்டம்.6.சிகிச்சை உதவியாளர் காலிப்பணியிடம் 3, கல்வித் தகுதி அங்கீகரிக்கப்பட்ட பல்கலையில் செவிலிய சிகிச்சை இளங்கலை பட்டயப்படிப்பு.இப்பணிகள் முற்றிலும் தற்காலிகமானது. எக்காரணம் கொண்டும் பணி நிரந்தரம் செய்யப்பட மாட்டாது. பணியிடத்திற்கான அறிவிப்பு மற்றும் விண்ணப்பப் படிவம் சிவகங்கை மாவட்ட வலைதளம் http:/sivaganga.nic.inவேலைவாய்ப்பு பிரிவில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் சிவகங்கை மாவட்ட சித்த மருத்துவ அலுவலகத்திலும் விண்ணப்பங்கள் பெற்றுக் கொள்ளலாம்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் தகுந்த ஆவண நகல்களுடன் மாவட்ட சித்த மருத்துவ அலுவலர், மாவட்ட சித்த மருத்துவ அலுவலகம், பழைய அரசு தலைமை மருத்துவமனை வளாகம், நேரு பஜார், சிவகங்கை 630 561 என்ற முகவரிக்கு பிப்.14 மாலை 5:00 மணிக்குள் சமர்ப்பிக்கவேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை