| ADDED : டிச 04, 2025 05:26 AM
சிவகங்கை: பெண்களின் முன்னேற்றத்திற்கு சேவை புரிந்த பெண்கள் அவ்வையார் விருது பெற டிச.,31 க்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு சார்பில் பெண்களின் முன்னேற்றத்திற்கு பாடுபட்ட பெண்களுக்கு அவ்வையார் விருது மகளிர் தினத்தன்று முதல்வர் ஸ்டாலின் வழங்க உள்ளார். இந்த விருதுடன் ரூ.1.50 லட்சம் காசோலை, பாராட்டு சான்று வழங்கப்படும். இந்த விருது பெற தகுதியுள்ள சமூக சேவை புரிந்த பெண்கள் டிச., 31 க்குள் https://awards.tn.gov.in இணையதள முகவரியில் ஆவணங்களுடன் விண்ணப்பிக்கவும். அத்துடன் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தயாரித்த விபர அறிக்கை நகலை சிவகங்கை மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். விருதுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள், தமிழ்நாட்டில் பிறந்திருக்க வேண்டும், வயது 18 க்கும் மேல், குறைந்தது 5 ஆண்டு சமூக நலன் சார்ந்த நடவடிக்கை, பெண்களுக்கு பெருமை சேர்க்கும் விதத்தில் நடவடிக்கை, சமூக சீர்த்திருத்தம், மகளிர் மேம்பாடு, மதநல்லிணக்கம், மொழித்தொண்டு, கலை, அறிவியல், பண்பாடு, கலாசாரம், பத்திரிக்கை, நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மிக சிறந்து விளங்க வேண்டும். இது குறித்த விபரங்களை சிவகங்கை மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தில் தெரிந்து கொள்ளலாம்.