உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கூட்டுறவில் 28 உதவியாளர் நியமனம் 

கூட்டுறவில் 28 உதவியாளர் நியமனம் 

சிவகங்கை: சிவகங்கை மாவட்ட கூட்டுறவு துறையில் 28 உதவியாளர் பணிக்கு, எழுத்து, நேர்காணல் மூலம் நியமித்துள்ளதாக, கூட்டுறவு இணைபதிவாளர் கே.ஜினு தெரிவித்தார்.அவர் கூறியதாவது: தமிழக கூட்டுறவு துறைகளில் காலியாக உள்ள 2,257 உதவியாளர், இளநிலை உதவியாளர் பதவிக்கு, டிச., 24ல் எழுத்து தேர்வும், அதை தொடர்ந்து நேர்காணலும் நடத்தப்பட்டன. நேர்காணல் மூலம் தேர்வான அனைவருக்கும் உதவியாளர், இளநிலை உதவியாளர் பதவிக்கான பணி நியமன ஆணை நேற்று வழங்கப்பட்டது.சிவகங்கை மாவட்ட கூட்டுறவு துறையில் 28 உதவியாளர் பணியிடங்கள் மட்டுமே காலியாக இருந்தன. இதற்காக நடந்த எழுத்து தேர்வில் 61 பேர் தேர்ச்சி பெற்று, நேர்காணலுக்கு தேர்வாகினர். நேர்காணலுக்கு பின் இறுதியாக 28 பேர் உதவியாளர் பணிக்கு தேர்வாகினர். இவர்களுக்கான பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது, என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை