உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / குவாரி துவக்க கருத்து கேட்பு

குவாரி துவக்க கருத்து கேட்பு

பூலாங்குறிச்சி: திருப்புத்துார் ஒன்றியம்ஆத்திரம்பட்டி சமுதாய கூடத்தில் தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியம்சார்பில் கல் குவாரி திறப்பது குறித்து பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடந்தது.திருப்புத்துார் ஒன்றியம்செவ்வூரில் சாதாரண கற்கள் குவாரி அமைக்கப்பட உள்ளது. அதற்கான பொதுமக்கள் கருத்து கேட்பதற்காக மாசுக்கட்டுப்பாடு வாரியம் சார்பில் கருத்துகேட்பு கூட்டம் நடந்தது. மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் பாண்டியராஜன் தலைமை வகித்தார். கோட்டாட்சியர் பால்துரை பங்கேற்றார், கூட்டத்தில் 16 பேர் தங்களது கருத்துக்களை பதிவு செய்தனர். இவர்களின் கருத்துக்கள் அரசுக்கு அனுப்பப்பட்டு அதன் பின்னர் குவாரி அமைப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. தாசில்தார் மாணிக்கவாசகம், துணைத் தாசில்தார் செல்லமுத்து, ஆர்.ஐ., பாக்கியலட்சுமி, உள்ளாட்சி பிரதிநிதிகள், ஆத்திரம்பட்டி, பூலாங்குறிச்சி, செவ்வூர் கிராம பொதுமக்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை