உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டி

விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டி

சிவகங்கை; சிவகங்கை கலெக்டர் அலுவலக வளாகம் முன் நுழைவு வாயிலில் ஜன.9 காலை 7:00 மணிக்கு கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டி விழிப்புணர்வு மினி மாரத்தான் நடைபெறவுள்ளது.தமிழகத்தில் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் ஜன.19 முதல் 30 வரை சென்னை, கோயம்புத்துார், மதுரை மற்றும் திருச்சி ஆகிய நான்கு மாவட்டங்களில் நடக்கவுள்ளது. இப்போட்டிகளில் 36 மாநிலங்களிலிருந்து 5500 வீரர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.போட்டி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 5 சிறப்பு வாகனங்கள் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களுக்கும் ஜன.8 முதல் செல்லவுள்ளது. சிவகங்கை மாவட்டத்திற்கு ஜன.9 காலை 5:00 மணிக்கு வரவுள்ளது. ஜன.9 அன்று காலை 7:00 மணியளவில் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டி விழிப்புணர்வு மினி மாரத்தான் கலெக்டர் அலுவலக வளாகம் முன்புறமுள்ள நுழைவு வாயிலில் துவங்கி சிவகங்கை மாவட்ட விளையாட்டு அரங்கம் வரை நடைபெற உள்ளது. முதல் மூன்று இடங்களைப் பெறுபவர்களுக்கு ஜன.9 அன்று பிற்பகல் 2:00 மணிக்கு மருதுபாண்டியர் மேல்நிலைப்பள்ளி கூட்ட அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் பரிசு வழங்கப்படும் என மாவட்ட விளையாட்டு அலுவலர் ரமேஷ்கண்ணன் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி