உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  மானாமதுரை நான்கு வழிச்சாலையில் முட்செடிகளுக்குள் தடுப்பு கம்பிகள்

 மானாமதுரை நான்கு வழிச்சாலையில் முட்செடிகளுக்குள் தடுப்பு கம்பிகள்

மானாமதுரை: மானாமதுரை நான்கு வழிச்சாலையில் விபத்தை தடுக்க வைக்கப்பட்டுள்ள பேரிக்கார்டுகள் பராமரிக்கப்படாமல் முட்செடிகளுக்குள் வீசப்பட்டு வீணாகிறது. மதுரையிலிருந்து பரமக்குடி வரை நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டு போக்குவரத்து நடைபெற்று வருகிறது. முத்தனேந்தல் ராஜகம்பீரம்,எம்.கரிசல்குளம் உள்ளிட்ட கிராம பகுதிகளை இணைக்கும் ரோடுகளுக்கு முன் நான்கு வழிச்சாலையில் விபத்துக்களை தடுக்கும் வகையிலும் வாகனங்களின் வேகத்தை குறைக்க ஆங்காங்கே பேரிகார்டு வைக்கப்பட்டுள்ளது. முத்தனேந்தல் பகுதியில் வைக்கப்பட்டிருந்த பேரிகார்டு முட்புதர்களில் வீசப்பட்டு வீணாகி வருகிறது. மானாமதுரை நகர் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், ஆங்காங்கே ஏற்படும் விபத்துக்களை தவிர்க்கவும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரோட்டின் மையங்களில் வைக்கப்பட்டிருந்த பேரிகார்டுகளும் அகற்றப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை