| ADDED : டிச 04, 2025 05:18 AM
மானாமதுரை: மானாமதுரை தாலுகா அலுவலகத்தில் எஸ்.ஐ.ஆர்., தொடர்பாக நடந்த அனைத்து கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பா.ஜ., நிர்வாகிகளுக்கு முறையாக அழைப்பு கொடுக்காமல் புறக்கணிக்கப்பட்டதாக பா.ஜ., நிர்வாகிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மானாமதுரை தாலுகா அலுவலகத்தில் எஸ்.ஐ.ஆர்., தொடர்பாக நேற்று அனைத்துக் கட்சி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.கூட்டம் நடந்த போது வந்த பாஜ., நிர்வாகிகள் இக்கூட்டத்திற்கு முறையாக அழைப்பு கொடுக்காததை கண்டித்து அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்து தாலுகா அலுவலகத்திற்கு முன் போராட்டத்தில் ஈடுபட்டனர். கண்டறிய முடியாத அல்லது முகவரி உறுதி செய்யப்படாத வாக்காளர்கள் சிலரை வரைவு வாக்காளர் பட்டியலில் சேர்க்க முயற்சி நடைபெற்று வருவதாக அ.தி.மு.க., சார்பில் குற்றம் சாட்டினர். மானாமதுரை தாசில்தார் கிருஷ்ணகுமார் கூறியதாவது: அனைத்து கட்சி நிர்வாகிகள் கூட்டம் நடைபெறுவது குறித்து பா.ஜ., நிர்வாகிகளுக்கு முன்பே தகவல் தெரிவித்து விட்டோம். அரசியல் கட்சிகளின் அனைத்து குற்றச்சாட்டுகளும் பரிசீலிக்கப்பட்டு உரிய தீர்வு காணப்படும். தவறாக வாக்காளர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்தால் அந்த வாக்காளர்கள் உடனடியாக பட்டியலில் இருந்து நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.