மேலும் செய்திகள்
பெட்ரோல் குடித்து ஒருவர் பலி
5 hour(s) ago
பயிற்சி முகாம்
5 hour(s) ago
சாய்பாபா கோயிலில் சிறப்பு பூஜை
5 hour(s) ago
தேவகோட்டையில் அம்பு எய்தல் வைபவம்
5 hour(s) ago
சிலை பிரதிஷ்டை
5 hour(s) ago
காரைக்குடி:காரைக்குடியில் விற்கப்படும் ஆவின் பாலில், வாடை அடிப்பதாக கூறி வாடிக்கையாளர்கள் ஆவின் பூத் ஏஜன்ட்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.காரைக்குடி ஆவின் நிறுவனத்தில் நாள் ஒன்றுக்கு 60 ஆயிரம் லிட்டர் வரை பால் கொள்முதல் செய்யப்பட்டு விநியோகம் செய்யப்படுகிறது. காரைக்குடியில் 60க்கும் மேற்பட்ட ஆவின் பூத்கள் உள்ளது. ஆவின் மூலம் வழங்கப்படும் வயலட் நிற பால் பாக்கெட் தரமற்று இருப்பதாகவும் புளித்த சுவையுடன் இருப்பதாகவும் நுகர்வோர் தொடர்ந்து புகார் கூறி வந்தனர். இப் பிரச்னை இதுவரை சரி செய்யப்படவில்லை. இந்நிலையில் கடந்த சில தினங்களாக ஆவின் பால் பாக்கெட் வாங்கி பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள், பாலில் வாடை அடிப்பதாக கூறி பூத் ஏஜன்ட்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.பூத் ஏஜன்ட்கள் ஆவின் பால் கொண்டு வந்தவர்களிடம் புகார் தெரிவித்ததன் பேரில் பல இடங்களில் நேரடியாக வந்து ஆய்வு மேற்கொண்டனர். ஆனாலும் நேற்று மாலை வழங்கப்பட்ட பால் பாக்கெட்களிலும் துர்நாற்றம் அடிப்பதாக வாடிக்கையாளர்கள் தொடர்ந்து புகார் கூறினர். இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக, ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாடிக்கையாளர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.பொது மேலாளர் ராஜசேகர் கூறுகையில், ஆவின் பாலில் துர்நாற்றம் அடிப்பதாக வாடிக்கையாளர் புகார் தெரிவிப்பதாக முகவர்கள் தெரிவித்தனர். அதன் அடிப்படையில், அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டதோடு பால் பாக்கெட்களை மாற்றி தரவும் தெரிவித்துள்ளோம். இதற்கான காரணம் குறித்து, உரிய ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றார்.
5 hour(s) ago
5 hour(s) ago
5 hour(s) ago
5 hour(s) ago
5 hour(s) ago