உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / லஞ்சம்: வி.ஏ.ஓ.,வுக்கு 3 ஆண்டுகள் சிறை

லஞ்சம்: வி.ஏ.ஓ.,வுக்கு 3 ஆண்டுகள் சிறை

சிவகங்கை: லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ.,வுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சிவகங்கை நீதிமன்றம் உத்தரவிட்டது.சிவகங்கை மாவட்டம் திருப்பத்துார் அருகே கள்ளிப்பட்டைச் சேர்ந்த விவசாயி சங்குநாதன். 2007ல் இவர் உழவர் அடையாள அட்டை மூலம் மகளின் கல்வி உதவித்தொகைக்காக அதற்குரிய விண்ணப்பத்தில் கையெழுத்து பெற ஆலங்குடி வி.ஏ.ஓ., விஸ்வத்தை அணுகினார்.அவர் ரூ.300 லஞ்சம் கேட்டார். இதுகுறித்து சங்குநாதன் சிவகங்கை லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் தெரிவித்தார். அவர்களது ஆலோசனைப்படி ரசாயனம் தடவிய பணத்தை விஸ்வத்திடம் சங்குநாதன் கொடுத்தார்.அப்போது மறைந்திருந்த லஞ்சஒழிப்பு போலீசார் விஸ்வத்தை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு சிவகங்கை லஞ்ச ஒழிப்பு நீதிமன்றத்தில் நடந்தது. விஸ்வத்துக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.10,000 அபராதமும் விதித்து நீதிபதி செந்தில்முரளி தீர்ப்பளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை