உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / திருப்புவனம் - காரைக்குடிக்கு பஸ் வசதி: மாணவர்கள் கோரிக்கை

திருப்புவனம் - காரைக்குடிக்கு பஸ் வசதி: மாணவர்கள் கோரிக்கை

திருப்புவனம் : திருப்புவனத்தில் இருந்து காரைக்குடிக்கு நேரடி பஸ் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என கல்லுாரி மாணவ, மாணவியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.திருப்புவனத்தைச் சுற்றிலும் 173 கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்களைச் சேர்ந்த மாணவ, மாணவியர் பலரும் திருப்புவனத்தில் உள்ள அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் பள்ளியில் கல்வி பயில்கின்றனர். இருபாலருக்கும் தனித்தனி பள்ளிகள் செயல்படுவதால் கிராமப்புற பெற்றோர் பெண்களை ப்ளஸ் 2 வரை கல்வி பயில அனுமதிக்கின்றனர். அதன்பின் உயர் கல்வி பயில அனுமதிப்பதில்லை.திருப்புவனத்தில் அரசு கலை கல்லுாரி ஏதும் இல்லை.மேற்படிப்பிற்கு மதுரை அல்லது காரைக்குடி செல்ல வேண்டும், காரைக்குடி அழகப்பா பல்கலை செல்ல திருப்புவனம் மாணவ, மாணவியர் சிவகங்கை சென்று அங்கிருந்து திருப்புத்தூர் வழியாக காரைக்குடி செல்ல வேண்டும், காலை நேரத்தில் திருப்புவனத்தில் இருந்து சிவகங்கைக்கு போதிய பஸ்வசதி இல்லை. காலை நேரத்தில் இரண்டு டவுன் பஸ்களும், ஒரே ஒரு தொலை துார பஸ் மட்டுமே உள்ளது.டவுன் பஸ் சிவகங்கை செல்ல குறைந்த பட்சம் ஒன்றரை மணி நேரம் ஆகும், அதில் சென்று கல்லூரிக்கு குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல முடியாது. எனவே கல்லூரி மாணவ, மாணவியர் பயன்பெறும் வகையில் திருப்புவனத்தில் இருந்து காரைக்குடிக்கு நேரடி பஸ் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என பெற்றோர்கள் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை